பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய 5 உயிரினங்கள்.
05. சாஸ்தாசரஸ் ( Shastasaurus)
என்னடா இது பெயரே வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா. ஆமாங்க இந்த பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினங்களில் இதுவும் ஒன்று.
இது ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இது ஒரு ஊனுண்ணி. கடலில் வாழ்ந்த மீன்களை உணவாக உட்கொண்டுள்ளது. இது சுமார் 60 அடிக்கு மேல் வளரக்கூடியது.
04. Paraceratherium
இது பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் மிகப் பெரிய பாலூட்டி ஆகும்.
இது காண்டாமிருகத்தை போல ஒரு தாவர உண்ணி ஆகும். இது மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட போதிலும் இதற்கு காண்டாமிருகத்தை போன்று கொம்புகள் இல்லை.
மேலும் இந்த உயிரினம் சுமார் 16 அடி உயரமும் 74 அடி நீளமும் கொண்டது. இது கிட்டத்தட்ட 45,000 பவுண்டுகள் எடை உள்ளதாக கருதப்படுகின்றது.
இது உயரமான மரங்களில் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்ந்துள்ளது.உயரமான மரக்கிளைகளில் இருந்து இலைகளை இழுக்கப் பயன்படும் ப்ரீஹென்சைல் மேல் உதடு அல்லது தண்டு இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
03.Patagotitan mayorum
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் வகைகளில் இதுவே பெரிய டைனோசர் இனமாகும். இந்த டைனோசர் ஒரு தாவர வகை ஆகும்.
சுமார் நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது. மிக நீண்ட கழுத்து மற்றும் மிக நீண்ட வால் கொண்டது. இதன் படிமங்கள் முதன்முதலில் ஆர்ஜென்டீனாவில் 2012ல் கண்டுபிடிக்கப்பட்டன.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசரின் தலை முதல் வால் வரை 120 அடி நீளம் கொண்டுள்ளது. இது Diplodocus ஐ விட 40 அடி உயரமாக காணப்பட்டுள்ளது. இந்த டைனோசர் 75 டன் எடையைக் கொண்டிருந்தது.
02.Argentinosaurus
Argentinosaurus (அர்ஜென்டினோசொரஸ்) 1980 களில் அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் அடிப்படையில், இது (படகோட்டிடனின்) Patagotitan அதே நீளம் கொண்டது.
இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மதிப்பீட்டின்படி, (Argentinosaurus) அர்ஜென்டினோசொரஸ் (Patagotitan )படகோட்டிடனை விட 20 டன்கள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
01.நீல திமிங்கிலம் Blue Whale
Blue Whale இல்லாமல் மிகப்பெரிய விலங்கு பட்டியல் முழுமையடையாது, பூமியில் நீரிலும் சரி நிலத்திலும் சரி இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய பாலூட்டி உயிரினமாக இது திகழ்கின்றது.
உலகில் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய உயிரினமாக இது கருதப்படுகின்றது.
நீல திமிங்கலம் 100 அடி நீளத்தை எட்டும். சிறிய கார்களைப் போன்ற பெரிய இதயங்களைக்
கொண்ட இந்த நீர் பாலூட்டிகள் 200 டன்கள் எடையுள்ளதாக இருக்கும், இது கிட்டத்தட்ட 400,000 பவுண்டுகளுக்கு சமம் மற்றும் மிகப்பெரிய டைனோசரை விட இரண்டு மடங்கு அதிகமாகும். துரதிர்ஷ்டவசமாக,
இந்த திமிங்கலங்கள் உலக வனவிலங்கு நிதியத்தால் ஆபத்தானவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

Post a Comment