வித்தியாசமான பழங்கள்.10 different fruits?
வித்தியாசமான பழங்கள்.
ஆதிகாலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் பழங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் பழங்கள் மிகவும் சுவையாக காணப்படுவதோடு பார்ப்பதற்கு அழகாகவும் நிறைய விட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணம் மிக்கதாகவும் காணப்படுகின்றமையே மக்கள் பழங்களை அதிகமாக விரும்புவதற்கு காரணமாக அமைகின்றது.
அந்த வகையில் உலகில் பல வகையான பழங்கள் காணப்படுகின்ற போதிலும் மிகவும் சுவையானதும் வித்தியாசமானதுமான பத்து பழங்களின் தகவல்கள் கீழே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.
01.Hala fruit
இந்தப் பழங்கள் தென்கிழக்கு ஆசியாவிலும் பசுபிக் தீவுகளிலும் அதிகமாக விளைகின்றன. இந்த ஹலாப்பழங்கள் சுமார் 30 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.
இந்தப் பழமானது உண்பதற்கு மிகவும் சுவையாக காணப்படும்.
இந்தப் பழங்கள் அதிகமாக கடலோரப் பிரதேசங்களில் விளைகின்றது. இந்தப் பழங்கள் நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தாகவும் அந்நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இந்த மரத்தின் இலைகளைக் கொண்டு வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
02.Budase hand fruit
இந்தப் பழங்கள் சீனாவிலும் கொரியாவிலும் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாகும்.
இந்தப் பழங்கள் பார்ப்பதற்கு மனிதர்களின் விரல்கள் போன்று காணப்படுகின்றமையால் இந்த பழத்திற்கு அப்பெயர் வர காரணமாக அமைந்தது.
இந்தப் பழமானது வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே விளையக் கூடிய ஒன்றாகும். மேலும் இந்த பலமானது குளிர் காலத்திலேயே விளையக்கூடியது.
இந்தப் பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக காணப்படுவதோடு இதில் அதிகளவான ஆன்ட்டி ஆக்சிடென்ட்
காணப்படுகின்றமையால் நமது தசைகளில் ஏற்படுகின்ற வழியினை போக்குவதற்கு இப்பழத்தினை நாம் சாப்பிடலாம். இந்தப் பழங்களை உண்பதனால் உடலுக்கு அதிக பலன்கள் கிடைக்கப் பெறுகின்றது. எனவே இப்ப பழம் சீனாவில் பிரபலமான ஒரு பலமாக காணப்படுகின்றது.
03.snake fruit
இந்த ஸ்நேக் ஃப்ரூட் இந்தோனேசியாவிலும் ஜாவா தீவுகளிலும் அதிகமாக பிழைகின்ற ஒரு பழமாக காணப்படுகின்றது.
இந்தப் பழத்தின் மேற்பரப்பானது ஒரு பாம்பினுடைய தோலை போன்ற அமைப்பினையும் பலத்தின் உட்புறம் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
இந்தப் பழமானது அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது.
மேலும் இப்பழத்தை சாப்பிடுவது ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுவது போன்று சுவையை உணர வைக்குமாம். அதனால் இப்ப பழத்தினை உலக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர்.
04.swiss chees fruit
இப்பழமானது மெக்சிகோ மற்றும் பனாமா நாட்டிலுள்ள டிராபிகோ காடுகளிலே அதிகமாக விளைகின்றன. இந்தப் பலமானது அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் வரை நீளமாக வளரக்கூடியது. மேலும் இப்பழமானது ஒரு மரத்தில் இரண்டு அல்லது மூன்று பழங்கள் மாத்திரமே வளரும். இந்தப் பழம் அதிக இனிப்பு சுவை கொண்டதாக காணப்படுகின்றமையால் இப்பழத்தினை மக்கள் அதிகமாக விரும்பி உண்கின்றனர். இந்தப் பழத்தின் சுவையானது சற்று வித்தியாசமானதாக காணப்படுகின்றோமேயானால் இப்பழத்தினை சேலட் செய்தும் சிலர் சாப்பிடுகின்றனர். ஆக்சலிக் ஆக்சிட் அதிகமாக இப்பழத்தில் காணப்படுகின்றமையால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை இப்பழம் அதிகரிக்கின்றது. எனவே இப்பழுத்தினை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
05.Blood lime fruit
இந்தப் பழமானது ஆவுஸ்திரேலியாவில் அதிகமாக விளைகின்றது. இது பார்ப்பதற்கு சிவப்பு நிறமாக காணப்படுவதோடு இதில் அதிக இரும்பு சத்து காணப்படுகின்றமையால் இப்பழத்திற்க்கு இப் பெயர் வர காரணமாக அமைந்தது. இந்தப் பழங்கள் அதிகபட்சமாக நாலு சென்டிமீட்டர் வரை வளரக்கூடியதாகும். இப்பழத்தின் சுவையானது புளிப்புத் தன்மை கொண்டதாகவும் சற்று உப்பு நிறைந்ததாகவும் காணப்படும். அது மட்டுமல்லாமல் இப்பழத்தில் அதிகளவான ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதினால் இப்பழத்தினை காயங்களை குணப்படுத்தும் ஒரு மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
06.Rambootan fruit
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாக இப்ப பழம் காணப்படுகிறது.
இப்ப பழங்கள் அதிகபட்சமாக ஆறு சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது.
இப்ப பழங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். இப்பழத்தின் மேற்பகுதி முட்கள் போன்ற அமைப்பினையும் உட்புறம் வெள்ளை நிற பந்து போன்றும் காணப்படும். இந்தப் பழத்தில் அதிகளவான விட்டமின்கள் காணப்படுகின்றமையால் இந்த பழம் உலக அளவில் பெரிதும் மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு பழமாக காணப்படுகின்றது.
07.Longen fruit
இந்தப் பழங்கள் ஆசியாவிலும் சீனாவிலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் அதிகமாக விளையக்கூடிய ஒரு பழமாகும்.
இந்தப் பழங்கள் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது.
இந்தப் பழத்தின் உட்பகுதி ஒரு ஜெல்லி போன்று காணப்படுவதுடன் நடுவில் ஒரு விதை காணப்படும்.
இந்தப் பழம் பார்ப்பதற்கு சிறிய பழமாக காணப்பட்டாலும் இதன் சுவை மக்களை அதிகமாக விரும்ப வைத்துள்ளது. மேலும் இப்பழத்தை சாப்பிடுவது நம் கண்களுக்கு மிகவும் நல்லது .
08.Black Safot fruit
இந்தப் பழங்கள் மத்திய அமெரிக்காவில் அதிகமாக விளைகின்றது. அங்கு வாழும் மக்கள் இப்பழத்தினை சாக்லேட் பலம் என்று அழைக்கின்றனர். ஏனென்றால் இப்பழத்தின் உட்புறம் சாக்லேட் போன்று காணப்படுகின்றமையால் ஆகும்.
இந்தப் பழங்கள் அதிகபட்சமாக 10 cm தொடக்கம் 30 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியதாகும். இந்தப் பழங்கள் மூன்று வருடத்திற்கு ஒரு முறையே காய்க்கக்கூடிய பழமாகும் இதனால் இப்பழம் ஒரு அரிதான பழமாக கருதப்படுகின்றது.
இதனால் இப்பழத்திணை அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கின்றனர்.
09.Mangustan fruit
இந்தப் பழங்கள் ஆசியாவிலும் கொலம்பியாவிலும் அதிகமாக விளைகின்றது. இந்தப் பழங்கள் அதிகபட்சமாக 8 சென்று மீட்டர் வரை வளரக்கூடியது. இப்பழத்தின் வெளிப்புறம் கடும் சிவப்பு நிறமாக காணப்படுவதோடு இதன் உட்புறம் வெள்ளைப் பூண்டு அமைப்பில் காணப்படும். அது மட்டும் இல்லாமல் இப் பழத்தில் அதிகளவான சோடியம் நியூட்ரிசன் என்பன அதிகமாக காணப்படுகின்றது.
10.Red banana fruit
வாழைப் பழங்களில் அதிகளவான வகைகள் காணப்படுகின்றது. அந்த வகைகளில் மிகவும் விலையுயர்ந்தது சிவப்பு வாழைப்பழங்கள் ஆகும். இந்த சிவப்பு வாழைப்பழங்கள் ஆசியாவிலேயே அதிகமாக விளைகின்றது. இதில் மற்ற வாழைப்பழங்களை விட அதிகமான பொட்டாசியம் காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் இந்த வாழைப்பழங்களில் அதிகளவான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றமையால் இந்தியா தாய்லாந்து சீனா ஆசியா போன்ற நாடுகளில் அதிகமாக மக்கள் இப்பழத்தினை வாங்கி உண்கின்றனர்.
Post a Comment