உடலில் ரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்.

  உடலில் ரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய  10 உணவுகள்.

ரத்தம் அதிகரிக்க

 அனைவருக்கும் வணக்கம் இன்று அதிகமானவர்களுக்கு காணப்படும் ஒரு பிரச்சனை ரத்த சோகையாகும். இந்த ரத்தசோகை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இவற்று பிரதான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். புதிய சிவப்பு அணுக்கள்  உடலில் உருவாவதற்கான போதிய அளவு ஊட்டச்சத்து இன்மையே இதற்கு காரணமாகும். நமது உடலில் சிவப்பு அணுக்கள் உருவாவதற்கு தேவையான சத்துக்களாவன  இரும்புச்சத்து விட்டமின் சி போலிக் அமிலம் விட்டமின் பி12 புரதம்  என்பனவாகும். இந்த ஐந்து சத்துக்களும் ஒன்று சேர்ந்து நமது உடலில் ரத்தம் உருவாகுவதற்கு உதவி புரிகின்றது. நமது உடலில் இரத்தம் உருவாகுவதற்கு தேவையான அடிப்படை சத்துக்கள் இவை ஆகும். இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது உடலில் புதிய ரத்தம் உருவாகும். இதன் மூலம் ரத்த சோகை குணமாகும். இன்று நாம் உங்களுக்காக உடலில் ரத்தம் அதிகரிப்பதற்கு சாப்பிட வேண்டிய முதல் பத்து cளை கீழே தொகுத்துள்ளோம். இதனை வாசித்து நீங்கள் பயன் பெற்று உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள்.இரத்த சோகை அறிகுறிகள்


01. கருப்பு திராட்சை

ரத்தம் அதிகரிக்க


 இந்த கருப்பு திராட்சையில் அதிகப்படியான இரும்புச் சத்தும் பொட்டாசியம்  அடங்கியுள்ளது. முதலில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஓரளவு கருப்பு திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அதனை மிக்ஸியில் போட்டோ அரைத்து வெறும் வயிற்றில் பருகுவதின் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க முடியும். இவ்வாறு தினம் இதனை பருகி வருவதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.


02. மாதுளை ஜூஸ்

ரத்தம் அதிகரிக்கv

இன்று பழங்களின் ஊடாக மனிதர்கள் அதிக  உடல் சார்ந்தநன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு பழங்களும் எமது  உடலுக்குத் தேவையான சிறந்த சத்துக்களை வழங்குகின்றது. அந்தப் பழங்களில்  அதிக இரும்புச்சத்து கொண்ட பழமாக மாதுளை பழம் காணப்படுகின்றது. இரும்புச்சத்து மட்டுமல்லாமல் ஏராளமான விட்டமின்களும் கனியுப்புகளும் அடங்கி உள்ளது. மாதுளையில்  சிவப்பு நிற மாதுளை தவிர்த்து நாட்டில் விளையும் மாதிரி உண்ண வேண்டும். அல்லது ஜூஸ் செய்து பருகுவதின் ஊடாக எமது உடலில் ரத்தத்தின் அளவினை அதிகரிக்க முடியும். மேலும் ரத்தசோகை நோயினை குணப்படுத்த முடியும்.



03. பீட்ரூட் ஜூஸ்

ரத்தம் அதிகரிக்க

காய்கறி வகைகளில் அதிகப்படியான இரும்புச் சத்தினை கொண்ட ஒரு காய்கறியாக பீட்ரூட் காணப்படுகின்றது. இந்த பீட்ரூட்டினை நீங்கள் உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் ஊடாக உடலில் ரத்தத்தின் அளவினை அதிகரிக்க முடியும். மேலும் இதனை மதிய நேர உணவுகளில் உட்கொள்ளலாம். இதனை ஜூஸாக பருகுவதின் ஊடாக மேலும் சிறந்த பலனை பெற்றுக் கொள்ள முடியும்.



04. ஆட்டு ஈரல்

ரத்தம் அதிகரிக்க

ஆடு மற்றும் பன்றியின் ஈரலில் அதிகப்படியான இரும்பு  மற்றும் புரதம் விட்டமின் பி12 என்பன அடங்கி உள்ளது. இந்த மூன்று ஊட்டச்சத்துகளும் அடங்கி இருக்கும் ஒரு உணவு இந்த ஈரல் ஆகும். எனவே இந்த ஈரலினை சாப்பிடுவதின் ஊடாக ரத்தசோகை நோயினை குறைத்துக் கொள்ள முடியும். எனவே எமது உணவுகளில் இந்த ஈரலை ஒரு நேரத்திற்கு சேர்த்துக் கொள்வது நல்லது.



05. கீரை வகைகள்.

ரத்தம் அதிகரிக்க

கீரை வகைகளை பொறுத்தவரையில் நாம் அனைத்து கீரைகளையும் சாப்பிடுவது நமக்கு நல்லது. பல வகையான கீரை வகைகள் காணப்படுகின்ற போதிலும் அதிகப்படியான இரும்புச் சத்தினை கொண்ட ஒரு கீரை வகையாக முருங்கைக்கீரை காணப்படுகின்றது. எனவே தனது உடலில் ரத்தம் அதிகப்படியாக ஊற வேண்டும் என நினைப்பவர்கள் முருங்கைக் கீரையை தனது உணவு வேலைகளில் அதிகமாக சேர்த்துக் கொள்வது சிறந்தது. இந்த முருங்கைக் கீரை சாப்பிட விரும்பாதவர்கள் முருங்கைக் காய்களை பொரியல் செய்து சாப்பிடலாம்.



06. சிட்ரஸ் பழங்கள்

ரத்தம் அதிகரிக்க

பழங்களான எலுமிச்சை தோடம்பழம்  நாராம் பழம் சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனென்றால் இவ்வகையான பழங்களில் அதிகளவான விட்டமின் சி காணப்படுகின்றது. இந்த விட்டமின் சி யின் பிரதான துளிபாடு என்னவென்று பார்த்தோமானால். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள இரும்புச் சத்தினை அகத்தறிஞ்சுவதற்கு உதவுகின்றது. இந்த விட்டமின் சி  இல்லாவிடின் நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள இரும்பு சத்தானது எமது உடலுக்குக்  சரியாக கிடைக்காது. எனவே நாம் விட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது சிறந்தது. விட்டமின் சி நிறைந்த பழங்களை  ஜூஸ் செய்து தினமும் பருகுவதின் ஊடாக உணவில் உள்ள இரும்பு சத்து அகத்துறிஞ்சப்பட்டு  அது உடலில் இரத்தம் அதிகரிப்பதற்கு  உதவியாக இருக்கின்றது.


07. பேரிச்சம்பழம்

ரத்தம் அதிகரிக்க

இந்த பேரிச்சம் பழத்தில் அதிகப்படியான இரும்பு சத்து பொட்டாசியம் காணப்படுகின்றது. இதைத் தவிர ஏராளமான விட்டமின்களும் மினரல்ஸ் அடங்கியுள்ளது.  எமது உடலுக்கு அதிகப்படியான எனர்ஜி கொடுக்கக் கூடிய ஒரு பழமாக இந்த  பேரீச்சம் பழம் காணப்படுகின்றது. உடல் சுறுசுறுப்பாக காணப்படுவதற்கு இந்த பேரிச்சம் பழத்தை   தினமும் சாப்பிடுவது  நல்லது. மேலும் இதனை சாப்பிடுவதின் ஊடாக உடலில் ரத்தம் அதிகரிக்கின்றது.


08. அத்திப்பழம்

ரத்தம் அதிகரிக்க

உலர் பழங்களில் இந்த அத்திப்பழம் சிறப்பான ஒரு பழமாகும். இந்த அத்திப்பழத்திலும் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகின்றது. இந்த அத்தி பழங்களை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வருவது நமது உடலுக்கு நல்லது. இந்த அத்திப்பழத்தினை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதின் ஊடாக நாம் சாப்பிடும்  உணவுகள் எமது உடலில் சேர்வதற்கு உதவி புரிகின்றது.



09.  முட்டைகள்

ரத்தம் அதிகரிக்க

முட்டைகளில் பல வகையான முட்டைகள் காணப்பட்டாலும் அதிகப்படியான சத்துக்களை கொண்ட முட்டை நாட்டுக்கோழி முட்டையாகும். ஏனென்றால் இந்த நாட்டுக்கோழி முட்டையில் சுத்தமான புரதம் மற்றும்  கொழுப்பு அடங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான போலிக் அமிலம் காணப்படுகின்றது. எனவே தினமும் நாம் முட்டைகளை சாப்பிட்டு வருவதன் ஊடாக எமது உடலில் ரத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.


10. காய்கறி சூப்

ரத்தம் அதிகரிக்க

 காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சூப் செய்து சாப்பிடுவதின் ஊடாக மிக உடலுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைத்து விடுகின்றது. இது மட்டுமல்லாமல் சாப்பிட்டு உணவுகள் எளிதில் சமிப்பாடு அடைவதற்கும்  இந்த காய்கறி சூப் உதவுகின்றது.  நீங்கள் அசைவ உணவை விரும்புவர்கள்  என்றால்  ஆட்டுக்கால் சூப்பினை பருகுவது மிகவும் நல்லது. இந்த ஆட்டுக்கால் சூப்ப்பானது நமது எலும்புகள் மற்றும் மூட்டுக்கள் வலும்பெற உதவுகின்றது. அது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பலம் இரத்தம் உருவாகுவதில் செல்வாக்கு செலுத்துகின்றது.


  மேலதிக தகவல்கள் 


 உங்களுடைய உடலில் அதிகப்படியான ஹீமோகுளோபின் அதிகரிக்க  வேண்டுமென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.  அவற்றுள்  பிரதானமானது காப்பி மட்டும் டீ ஆகும். இவற்றுள் அதிகப்படியான ரசாயனங்கள் காணப்படுகின்றன.

 இதை நான் கொள்ளும் உணவுகளை நமது உடலினுள் சேர்வதை  தடுக்கின்றது.

 மேலும் மதுபானங்கள் போதை பொருட்கள்   பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post