Ticker
இலகுவாக படிப்பது எப்படி? How to study easily?
இலகுவாக படிப்பது எப்படி?
படிப்பது எப்படி? |
இலகுவாக படிப்பது எப்படி? குறுகிய நேரத்தில் அதிகமாக படிப்பது எப்படி?
போன்ற பொதுவான பல கேள்விகள் எழுகின்றன. எனவே எவ்வாறு இலகுவாக படிக்கலாம் என்பது தொடர்பான 10 குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
01.திட்டமிட்டு படித்தல்
நாம் படிக்கும் போது திட்டமிட்டு படிக்க வேண்டும். அதாவது நாம் ஒரு பாடத்தை படிக்க வேண்டும் என்றால் அந்தப் பாடத்தில் எவ்வளவு பாடங்கள் இருக்கின்றது. அந்த பாடத்தை எவ்வளவு நாட்களில் நம்மால் படித்து முடிக்க முடியும். ஒரு நாளைக்கு எவ்வளவு பாடம் படிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு எவ்வளவு பாடம் படிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு எவ்வளவு பாடம் படிக்க வேண்டும். என்பதை நாம் முதலில் திட்டமிட்டு கோள்வோமே ஆனால். நம்மால் எந்த ஒரு கடினமான பாடத்தையும் இலகுவாக கற்றுக் கொள்ள முடியும். எனவே நாம் எந்த ஒரு பாடத்தையும் திட்டமிட்டு படிக்கும் போது அதனை மிக இலகுவாகவும் குறுகிய காலத்திலும் படிக்க முடியும்.
02.ஆரம்பத்தினை நன்றாக படிக்க வேண்டும்.
பகுதிகளை உங்களுக்கு மிக எளிதாக படிக்க முடியும். ஏனென்றால் அதன் அடிப்படையை நீங்கள் நன்றாக படித்துள்ளீர்கள்.
நீங்கள் ஒரு பாடத்தின் அடிப்படையினை அதாவது ஆரம்ப பக்கத்தினை நன்றாக படிக்காமல் அடுத்த பக்கங்களை படிக்க தொடங்கும் போது அது உங்களுக்கு புரியாமலும் படிப்பதற்கு கடினமாகவும் அப்பாடத்தின் மீது உங்களுக்கு வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே ஒரு பாடத்தை படிக்க ஆரம்பிக்கும் முன் அப்பாடத்தின் முதல் பக்கத்திலே அதாவது அடிப்படையினை நன்றாக படித்தீர்கள் ஆனால் உங்களுக்கு அப்பாடத்தினை முழுவதும் படித்து முடிக்க இலகுவாக இருக்கும்.
03.எவ்வாறு படிக்க ஆரம்பிப்பது?
இன்று மாணவர்களிடையே காணப்படுகின்ற ஒரு பெரிய பிரச்சனை எவ்வாறு படிக்க ஆரம்பிப்பது? என்பதாகும் நாம் படிக்கும் போது ஏதாவது தடங்கல்கள் மற்றும் தொந்தரவுகள் ஏற்படும் எனவே நாம் படிப்பதற்கு என ஒரு குறித்த நேரத்தினை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் .
உதாரணமாக நாம் நள்ளிரவில் ஒரு இரண்டு மணித்தியாலயங்களை படிப்பதற்காக ஒதுக்குவோமானால் நமக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்காது.
ஒரு இரண்டு நாட்கள் நாம் நள்ளிரவில் படிப்போமானால் நாம் படிக்கும் பாடத்தின் மீது நமக்கு விருப்பு உண்டாகி எந்த ஒரு தொந்தரவு வந்தாலும் தினமும் அந்த குறித்த நேரத்தில் நாம் படிக்கலாம்.
04. உணவு
நமது படிப்பிற்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் நாம் படிப்பதற்கு முன் காரமான உணவுகளையும் இலகுவில் சமைப்பாடு அடையாத உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிப்பதற்கு முன் அதிகமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது நாம் அதிகமான உணவுகளை உட்கொள்ளும் போது அது சமைப்பாடு அடைய அதிக நேரம் எடுக்கும் எனவே நாம் அதிகமாக சாப்பிடும் போது வயிற்றில் ரத்தத்தின் ஓட்டம் அதிகரிக்கிறது அவ்வாறு வயிற்றில் ரத்தத்தின் ஓட்டம் அதிகரிக்கும் போது எமது மூலைக்கு ரத்தம் குறைவாக
செல்கின்றது. எனவே மூளைக்கு இரத்தம் குறைவாக செல்வதால் நாம் படிப்பது மூளையில் விரைவில் தங்காது. மூளையின் செயல்பாடு மிக குறைவாக காணப்படும்.
எனவே நாம் படிப்பதற்கு முன் இலகுவில் சமைப்பாடு அடையக்கூடிய உணவுகளை உட்கோள்ள வேண்டும்.
05. படிப்பதற்கு முன் அமைதியாக இருத்தல்.
நாம் ஒரு குறித்த பாடத்தினை படிப்பதற்கு முன்பும் பின்பும் சரி அமைதியாகவும் யாருடனும் பேசாமலும் இருக்க வேண்டும். நாம் தேவையில்லாமல் ஒருவருடன் பேசும் போது நமது எனர்ஜி வீணாவதுடன் படிக்கும் ஆர்வமும் குறைந்து போகிறது.
மேலும் நேரமும் வீணாகுகின்றது.
நாம் படிப்பதற்கு முன்பு யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்போமே ஆனால் நாம் படிக்கவிருக்கும் பாடத்தினை மிக தெளிவாகவும் இலகுவிழும் கற்றுக் கொள்ள முடியும்.
06. நேர்மறையான எண்ணங்கள்
நாம் படிப்பதற்கு முன் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.நேர்மறையாக சிந்திக்கும் போது நமக்குள் ஒரு நம்பிக்கை எழும் அந்த நம்பிக்கையானது நம்மை நன்றாக படிக்க வழிவகுக்கும். எனவே படிப்பதற்கு முன் என்னால் இதை படிக்க முடியும், இதை என்னால் மிக இலகுவாக படிக்க முடியும், என்னால் முடியும் என்று நீங்கள் நினைக்கும் போது எவ்வளவு கடினமான பாடமாக இருந்தாலும் அதனை மிக இலகுவாக உங்களால் படித்து முடிக்க முடியும் எனவே நேர்மறையாக சிந்தியுங்கள்.
07. வெற்றி தோல்வியை சமமாக பாருங்கள்.
நமது வாழ்வும் சரி படிப்பும் சரி வெற்றியையும் தோல்வியையும் சமமாக நினைக்க வேண்டும். வெற்றி ஏற்படும் போது சந்தோஷப்படுவதும் தோல்வியிடம் எழும் போது வருத்தப்படுவதும் கூடாது. அவ்வாறு நாம் வெற்றி தோல்வியை சமமாக நினைக்கும் போது எந்த ஒரு வேலையையும் பதற்றமில்லாமல் செய்ய முடியும்.
08. எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.
இதை செய்யாதே இது உன்னால் முடியாது. உன்னால் முடியுமா? நீ இதற்கு சரி வர மாட்டாய். இதை யாராலும் செய்ய முடியாது. இதனை செய்வது கடினம். எவ்வாறு ஒருவர் எதிர்மறையாக உங்களிடம் பேசுவாரே ஆனால் அவரிடம் இருந்து நீங்கள் விலகி செல்ல வேண்டும். என்றால் எதிர்மறையான எண்ணங்கள் நமது வெற்றியை தள்ளிப் போடும் அல்லது நமது வெற்றிக்கு தடையாக இருக்கும்.
அதுபோலவே எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
நீங்கள் நேர்மறையாக சிந்திக்கும் போது வெற்றியாளராக மாறுகிறீர்கள் எனவே நீங்களும் நேர்மறையாக சிந்தியுங்கள் உங்களை சுற்றி உள்ளவர்களையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக மாற்றுங்கள்.
09. படிப்பதை எழுதுங்கள்.
நீங்கள் ஒரு குறித்த விடயத்தை பத்து தடவை படிப்பதை விட படித்ததை ஒரு இரண்டு தடவை எழுதிப் பாருங்கள் அவ்வாறு நீங்கள் எழுதிப் பார்க்கும்போது அது உங்களுக்கு நீண்ட நாள் ஞாபகத்தில் காணப்படும்.
மனிதனது ஞாபகத்தை குறுங்கால ஞாபகம், நீண்ட காலம் ஞாபகம் என இரு வகைகளாக பிரிக்கலாம்.
நாம் ஒரு விடயத்தை சில தடவைகள் படிக்கும் போது அது நமக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே நமது மூலையில் தங்கி இருக்கும்.
இதனை குறுங்கால ஞாபகம் என்று கூறலாம்.
ஆனால் நீங்கள் பல தடவை படித்ததை ஒரு தடவை எழுதிப் பார்த்தீர்களானால் அது உங்கள் மூளையில் நீண்ட நாட்கள் பதிந்திருக்கும்.
இதனை நீண்ட காலம் ஞாபகம் எனலாம்.
எனவே நீங்கள் ஒரு விடயத்தை படிக்கின்றீர்கள் என்றால் படித்த சில நிமிடங்களில் அதனை மீண்டும் எழுதிப்பாருங்கள்.
இவ்வாறு நீங்கள் அதனை எழுதும் போது அது உங்களுக்கு நீண்ட காலம் ஞாபகத்தில் இருக்கும்.
10. மெதுவாக படியுங்கள்.
அவ்வாறு படிக்கும் போது அடுத்த நாள் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே அவர்களிடம் போய்விடும்.
ஏனென்றால் அவர்கள் அடுத்த நாள் படிக்கும் போது பத்து மணித்தியாலங்கள் படிக்க வேண்டுமே என்ற எண்ணம் அவர்களை படிக்க விடாது.
எனவே நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு 30 நிமிடம் ஆரம்பத்தில் படியுங்கள்.
ஆரம்பத்தில் நீங்கள் படிப்பதற்கு குறுகிய நேரத்தை ஒதுக்கும்போது உங்களுக்கு அது இலகுவாக இருக்கும்.
பிறகு போக போக நிமிடங்களை நீங்களே கூட்டிக்கொண்டு செல்வீர்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலயங்கள் தொடக்கம் ஆறு மணித்தியாலங்கள் வரை உங்களால் படிக்க முடியும். எனவே படிக்க ஆரம்பிக்கும் போதுசிறிய ஒரு நேரத்தை ஒதுக்குங்கள்.
0 கருத்துகள்