அழகான கோழிகள். Top 10 Beautiful chickens.

 

அழகான கோழிகள்


உலகில் காணப்படும் மிகவும் அழகான 10 கோழி இனங்கள்.

அழகான கோழிகள்


 கோழிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  கோழிகள் முட்டையினை பெறுவதற்காகவும் சாப்பாட்டிற்காகவும் பயன்படுத்துகின்ற ஒரு உயிரினம் என்றே நீங்கள் நினைக்கின்றீர்கள். அதற்காகவே கோழிகளை மனிதர்கள் வளர்க்கின்றனர். நாம் வளர்க்கும் கோழிகளை பெருவிடை சிறுவிடை என்று இரண்டு வகைகளில் கூறுவோம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் கோழிகள் இந்த உலகில் மிகவும் அழகானவை. ஆம் இந்தக் கோழிகளை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று எமக்குத் தெரியாது.  இவ்வாறான அழகான கோழிகளும் நமது உலகில் இருக்கின்றது.

அழகான கோழிகள்

 உலகில் காணப்படும் மிகவும் அழகான பத்து கோழிகளின் பட்டியலை நாங்கள் கீழே உங்களுக்காக தொகுத்துள்ளோம்.


01.Bulwers pheasants


 இந்த இன கோழிகள்  தென் கிழக்காசியாவில் அதிகமாக வாழ்கிறது.  இக்கோடியின் அழகு அதன் வெள்ளை நிற வால் ஆகும். இந்தக் கோழி இனங்களின் வாலானது அதிகபட்சமாக 20 தொடக்கம் 30 இன்ச் வரை வளரக்கூடியது. ஆறு தொடக்கம் எட்டு வருடங்கள் வரை வாழக்கூடிய இக்கோழி  இனமானது சுமார் இரண்டரை கிலோ வரை எடை கொண்டு காணப்படும். இக் கோழி இனத்தின் இன்னும் ஒரு சிறப்பம்சம் இதன் தாடியின் நிறம் நீல நிறமாகும். இந்தத் தாடியானது 4 இன்ச் வரை வளரக்கூடியது. மேலும் இக் கோழி இனங்கள் பழங்களையும் விதைகளையும் சாப்பிட்டு உயிர் வாழக் கூடியது.



02.ARGANT PHEASANTS


 இக் கோழி இனங்கள் ஆசிய நாடுகளிலேயே அதிகமாக வாழ்கின்றன.  இக் கோழியின் வாலானது  சுமார் 25 தொடக்கம் 35 இன்ச் வரை வளர்ந்து காணப்படும்.

 ஒரு மயிலானது எவ்வாறு தன் தோகையை விரித்து ஆடுமோ அது போன்று இக் கோழியும் தன் தோகைகளை விரித்து ஆட கூடிய வல்லமை பெற்றது. கோழி இனங்கள் அதிகபட்சமாக  35 தொடக்கம் 45 இன்ச் வரை வளரக்கூடியது. மேலும் இக்  கோழி இனங்களால் சுமார் 20 வருடங்கள் வரை வாழ முடியும்.

 இக் கோழி சுமார் 2.5kg தொடக்கம் 3.5kg வரை எடை கொண்டு காணப்படும்.  இக்கோழியினங்கள் பூச்சிகளையும் பழங்களையும் உண்டு உயிர் வாழக்கூடியது.



03.REEVES PHEASANTS


 உலகில் காணப்படும் கோழி வகைகளில் மிகவும் நீண்ட வாலினை கொண்ட கோழி இனம் இதுவே ஆகும். இந்தக் கோழி இனங்களின் வாலானது சுமார் 85 இன்ச் வரை வளர்ந்து காணப்படும். இக் கோழிகள்

 சைனாவிலே அதிகமாக வாழ்கின்றன. பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இக் கோழியானது  ஒன்றரை கிலோ கிராம் வரையிலான எடையை  கொண்டு காணப்படுவதோடு சுமார் நான்கு வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது. இக் கோழிகளின்  எண்ணிக்கையானது தற்போது    குறைந்து காணப்படுகின்றது.



04.SILVER PHEASANTS


 இக் கோழி  இனங்கள் இந்தோனேசியாவில் அதிகமாக வாழ்கின்றன. கோழி இனங்கள்  அதிகபட்சமாக 45 இன்ச் வரை வளர்ந்து காணப்படும். மேலும் இவை 15 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது. மேலும் இக் கோழிகள் இரண்டு கிலோகிராம் வரை எடைக்கொண்டு காணப்படும்.

 கோழி இனங்கள் இரண்டு நிறங்களில் காணப்படும்.  வெள்ளை மற்றும் சாம்பல்  நிறங்களில் காணப்படும். இக்கோழியினங்களும் மற்றைய கோழிகளை போல் விதைகளையும் பழங்களையும் சாப்பிடுகின்றன.



05.SWINHOES PHEASANTS


 இக்கோழியினங்கள் தென்னாபிரிக்க காடுகளிலேயே அதிகமாக வாழ்கின்றன. இக்கோழி இனங்களில் ஆண் கோழி பெண் கோழி என்பவற்றை நிறங்களின் அடிப்படையில் நாம் வேறுபடுத்தி காண முடியும். இருபத்தைந்து இன்ச் வரை வளரக்கூடிய இக்கோழி இனங்கள் சுமார் பத்து வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது. இவை பழங்களையும் பூச்சி இனங்கள் மற்றும் விதைகள், புழுக்களை சாப்பிடுகின்றது.



06.BORNEAR PHEASANTS


 இக்கோழிகள் ஆஸ்திரேலியாவில் அதிகமாக வாழ்கிறது. ஒரு மயிலுக்கு எவ்வாறு தோகை காணப்படுகின்றதோ அதேபோன்று ஒரு சிறிய தொகை இக்கோழிகளுக்கு காணப்படுகிறது.

 இக்கோழியினங்கள் நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படும். இக்கோழி இனங்கள் அதிகபட்சமாக 20 இன்ச் வரை வளரக்கூடியது. இக் கோழி இனங்கள் சுமார் ஐந்து வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது மேலும் இவை ஒரு கிலோ கிராம் வரை எடை கொண்டு காணப்படும். இவை ஏனைய கோழி இனங்களைப் போன்று விதைகளையும் பூச்சிகளையும் உண்டு வாழ்கின்றது.



07.WHITE EARED PHEASANTS


 பெயருக்கு ஏற்ற வகையில் வெள்ளை நிறமாக காணப்படும் இக்கோழிகள் சைனாவிலேயே அதிகமாக வாழ்கின்றது. மேலும் இவை குளிரான இடங்களில் வாழ்கிறது. சுமார் பத்து வருடங்கள் வரை உயிர் வாழக்கூடிய இக் கோழி இனங்கள்  30 இன்ச் வரை வளரக்கூடியது. இவை இரண்டரை கிலோ வரை எடை கொண்டு காணப்படும். இக்கோழிகளில்  ஆண் கோழியும் பெண் கோழியும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி காணப்படும். மேலும் இவை பூச்சிகள் பழங்கள் புழுக்கள் என்பவற்றை உண்டு வாழும்.



08.CRIMSON HORNED PHEASANTS


 இக் கோழிகள் அதிகமாக பாகிஸ்தானில் வாழ்கின்றன. இக்கோடியின் சிறப்பம்சமானது இதன் தாடைகள் ஆகும். அதாவது இது உணவினை உண்ணும் போது தனது தடைகளை பெரிதாக்கி கொத்தி தின்னும். இக்கோடிகள் சுமார் 25 இன்ச் வரை வளரக்கூடியது.

 மேலும் இவை ஐந்து வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது. இரண்டு கிலோ வரை எடைக்கொண்டு காணப்படும். இக்கோழிகளில் பெண் கோழியை விட ஆண் கோழிகள் 3 இன்ச்  பெரிதாக காணப்படும்.


09.CRESTED FIRE BACK PHEASANTS


 இக் கோழிகள் தாய்லாந்தில் அதிகமாக வாழ்கின்றன. சுமார் 8 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடிய இந்த கோழி இனங்கள் இரண்டு கிலோ வரை எடைக்கொண்டு காணப்படுவதோடு 28 இன்ச் வரை வளரக்கூடியது. இக்கோழி இனங்களின் சிறப்பம்சம் இதன் தலையும் கண்களும் ஆகும். ஆம் இவை ஏனைய கோழிகளை விட இதன் கண்களும் தலையும் சற்று வித்தியாசமாக காணப்படும். மேலும் இவை பூச்சிகளையும் பழங்கள் விதைகள்  சில வேலைகளில் சிறிய  எலிகளையும்  உண்டு வாழ்கின்றன.



10.LADY AMNERSTS PHEASANTS


 இந்த கோழிகள் அதிகமாக இந்தியாவில் வாழ்கின்றன. இக்கோழிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையிலும் காணப்படும். பத்து வருடங்கள் வரை உயிர் வாழக்கூடிய இந்த கோழி இனங்கள் 48 இன்ச் வரை வளரக்கூடியது.

 மேலும் இக்கோழி இனங்கள் நான்கு கிலோ வரை எடை கொண்டு காணப்படும்.

You have to wait 200 seconds.

GET YOU CODE ...

Post a Comment

Previous Post Next Post